உலகம்

மகனின் இறுதிச்சடங்கு முடிந்து சில நேரத்தில், தாய்க்கு ஏற்பட்ட சோகம்!!

Summary:

mom died after son funeral

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது மகனை பறிகொடுத்த தாய் அந்த இழப்பின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின், கிரிஸ்டசர்ச்சில் உள்ள மசூதி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 38 வயதான காமெல் என்பரும் உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தநிலையில் அவரது இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் அவரது தாய்  மனவேதனையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த காமெலின் இறுதிசடங்கு Linwood இல் நடைபெற்றது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாய் மகன் இறந்த வேதனையை தாங்கிகொள்ள முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.Advertisement