கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
இன்பச்சுற்றுலா இறுதி சுற்றுலாவான கோரம்.. 19 பேர் உடல் நசுங்கி பலி, 32 பேர் படுகாயம்.!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, குடியிருப்பின் மீது மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ நாட்டில் உள்ள சல்மா நகரின் இருக்கும் தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேருந்து அங்குள்ள குடியிருப்பு பகுதி அருகே பயணம் செய்கையில், பேருந்தின் பிரேக் ஃபெயிலியர் ஆகியுள்ளது. இதனால் குடியிருப்பின் மீது பேருந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 32 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.