நான் எந்த தப்பும் செய்யல.. ஆனால், என்ன ஜெயில்ல போடுங்க.. இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..

நான் எந்த தப்பும் செய்யல.. ஆனால், என்ன ஜெயில்ல போடுங்க.. இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..


Man surrenders to police for peace and quiet

குற்றம் ஏதும் செய்யாமலேயே போலீசில் தானாக சரணடைந்துள்ளார் லண்டனை சேர்ந்த நபர் ஒருவர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தற்போதுவரை ஊரடங்கு நடைமுறை அமலில் உள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து எரிச்சலாகி விட்டதாகவும், எஞ்சிய காலத்தை அமைதியாக கழிக்க ஆசைப்படுவதாகவும் கூறி, தன்னை சிறையில் அடைக்கும்படி, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் லண்டனை சேர்ந்த நபர் ஒருவர்.

மேலும், தற்போது தான் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை விட, சிறை வாழ்க்கை மேலானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அந்த நபர் போலீசாரிடம் கூறியுள்ளார். எந்த ஒரு தவறும் செய்யாமல் தானாக வந்து தன்னை சிறையில் அடைக்கும்படி கேட்ட நபரால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.