இந்தியா உலகம் Covid-19

கொரோனா பீதிக்கு நடுவே லிப்ட் ஸ்விட்ச்களில் எச்சிலை காரி துப்பிய மர்ம இளைஞன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Summary:

Man spits on elevator buttons in Vancouver condo video

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், நபர் ஒருவர் லிப்ட் ஒன்றில் எச்சிலை துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கும் லிப்ட் ஒன்றில் நபர் ஒருவர் உள்ளே நுழைகிறார். உள்ளே நுழைந்ததும் சிறிது நேரம் அமைதியாக இருக்கும் அந்த நபர், தான் இறங்கவேண்டிய தளம் வந்ததும் வெளியே செல்வதற்கு முன் லிப்டில் இருக்கும் பட்டன்கள் மீது எச்சிலை துப்புகிறார்.

இந்த காட்சி லிப்ட் உள்ளே இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. நபர் ஒருவரின் அருவருக்கத்தக்க செயல் எப்படியோ குடியிருப்பு வாசிகளுக்கு தெரியவரவே இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை பரப்பும் விதமாக இந்த நபர் நடந்துகொண்டது அனைவரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Advertisement