ஆத்தாடி..16 கல்யாணம்,151 பிள்ளைகள்! மீண்டும் தயாரான 66 வயது நபரின் வினோத லட்சியத்தை பார்த்தீர்களா!!

ஆத்தாடி..16 கல்யாணம்,151 பிள்ளைகள்! மீண்டும் தயாரான 66 வயது நபரின் வினோத லட்சியத்தை பார்த்தீர்களா!!


man ready to next marriage who have 16 wives and 151 children

ஜிம்பாவேவை சேர்ந்த நபர் ஒருவர் 16 திருமணம் செய்துகொண்டு,151 குழந்தைகளைப் பெற்ற நிலையில்,  தற்போது 17வது திருமணத்திற்கு தயாராகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலத்தில் ஒரு திருமணம் செய்வதற்கே ஆண்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். மேலும் ஏராளமானோர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் மிஷெக் என்ற 66 வயது நிறைந்த நபர் ஒருவர் 16 திருமணம் செய்து, தற்போது 17வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். 

தான் இறப்பதற்கு முன்பு 100 மனைவிகளையும் 1000 குழந்தைகளையும் பெற வேண்டும் என்பதே அவரது லட்சியமாம். இதுகுறித்து அவர், 1983லேயே எனது பலதார திருமண திட்டத்தை துவங்கினேன். எனது மரணம் வரை இதை நிறுத்த போவதில்லை.  எனது மனைவிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களில் இருவர் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

மேலும் எனது பிள்ளைகள் சம்பாதித்து எனக்கு பணம் கொடுக்கின்றனர். அதனால் எளிதாக எனது நிதிசுமை குறைகிறது. அதுமட்டுமின்றி எனது மனைவிகள் அனைவரும் ஒவ்வொரு நாளைக்கும் மிகவும் சுவையாக சமைத்து கொடுக்கின்றனர். நான் என்ன செய்தாலும் அவர்கள் கோபப்படுவது கிடையாது என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் விரைவில் தனது 17வது திருமணத்தை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.