உலகம்

மாமனாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விமானத்தில் பறந்து வந்த மருமகன்! அதன் பின் நடந்த விபரீதம்.

Summary:

Man killed son in law accidentally in america

அமெரிக்காவில் தனது மாமனாருக்கு பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற மருமகன் தனது மாமனாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டென்னிஸ். 61 வயதான இவர் தனது மகளை நார்வேவை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளார். திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் சில காலம் அமெரிக்காவில் இருந்துவிட்டு பின்னர் நார்வே சென்றுள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாமனாரின் பிறந்த நாள் வருவதை ஒட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அவர் வீட்டுக்கு சென்றுள்ளார் கிறிஸ்டோபர். நேரில் சென்று வாழ்த்து கூறினால் நல்லா இருக்காது என்று யோசித்த கிறிஸ்டோபர் அதனால் சர்ப்ரைஸ் கொடுக்க இரவு நேரத்தில் வீட்டின் பின்புறமாக சென்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த புதரில் மறைந்துள்ளார் கிறிஸ்டோபர். இரவு நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ சத்தம் கேட்பதாக கையில் துப்பாக்கியுடன் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார் டென்னிஸ். அந்த சமயம் புதரில் இருந்து சர்ப்ரைஸ் என கத்திக்கொண்டு எழுந்துள்ளார் கிறிஸ்டோபர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டென்னிஸ் பயத்தில் தனது கையில் இருந்த துப்பாக்கியால் தனது மருமகனை சுட்டுள்ளார். இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலையே மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement