25 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய மாவு பாக்கெட்..! தற்போது அதை சமைத்து சாப்பிட்ட தாய் மற்றும் மகன்..! சாப்பிட்டதும் என்ன ஆனது தெரியுமா.?

25 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய மாவு பாக்கெட்..! தற்போது அதை சமைத்து சாப்பிட்ட தாய் மற்றும் மகன்..! சாப்பிட்டதும் என்ன ஆனது தெரியுமா.?


Man Discovered 25-Year-Old Puff Pastry in His Mothers Freezer and it Tasted Fine

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மாவு பாக்கெட் ஒன்றை பெண் ஒருவர் தற்போது சமைத்து சாப்பிட்டிற்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மாவு பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டுள்ளது.

Mysterious

எப்பவோ சமைப்பதற்காக வாங்கிய அந்த மாவு பாக்கெட் சமைக்கப்படாமல் அங்கு வைக்கப்பட்டிருந்துள்ளது. மாவு பாக்கெட்டை எடுத்து பார்த்தபோது அதன் காலாவதி காலம் மார்ச் மாதம் 1995 என போடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாவில் சமைத்து சாப்பிட ஆசைப்பட்டுள்ளார் அந்த பெண்.

இதுகுறித்து தனது மகனிடம் கூற, அவர் உங்கள் விருப்பம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆப்பிள், ஸ்டாபெரி பழங்களை கொண்டு புதுவிதமான டிஸ் ஒன்றை அந்த பெண் சமைக்க அதை அவரது மகன் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பலர் இந்த முயற்சியை பாராட்டினாலும், பலர் இது மிகவும் ஆபத்தான முயற்சி, இனி இப்படி செய்யாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர். அதேநேரம் அந்த மாவில் சமைத்து சாப்பிட்ட அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.