உலகம்

தோழிகளுடன் வீதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு  நிகழ்ந்த கொடூரம்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

Summary:

mainroad-attacked one boy

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரின் ரிச்மாண்ட் தெருவில் இரவு கேளிக்கை விடுதியில் இருந்து வந்த பெண் தமது நண்பர்களுடன்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

தனது நண்பர்களுடன் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். அதனை கண்டுகொள்ளாது அந்த இளம் பெண்  சென்றுள்ளார்.

இதனால் கோபமான அந்த இளைஞன், இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டு ஓடி சென்றுவிட்டார்.அதில் அந்த பெண்ணுக்கு கண் முற்றிலும் வீங்கி,  இமை கிழிந்ததுடன், கண்ணுக்குள் ரத்தக்கட்டும் ஏற்பட்டு அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.இது குறித்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.போலீசார் தெருவில் உள்ள  சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Advertisement