76 நாட்களுக்கு பிறகு, சீனா வூஹானில் முடிவுக்கு வந்த ஊரடங்கு!lockdown-completed-in-china-vuhan

சீனாவில் வுஹான் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது 190 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனா, ஹானில் தோன்றிய இத்தகைய கொடூர வைரஸால் உலகம் முழுவதும் 14,40,000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகள் நிலைகுலைந்து போய் உள்ளது. மேலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

china

இந்நிலையில் சீனாவில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து தற்போது இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது . மேலும் கடந்த சில நாட்களாக சீனாவின் வுஹான் நகரில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. உயிரிழப்பும் இல்லை.  கொரோனா பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11 வாரங்களுக்குப் பிறகு வுஹான் நகரில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு  முடிவுக்கு வந்துள்ளது.76 நாட்களுக்குப்பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் கடைகள்,  ஹோட்டல்கள், மால்கள்,  தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.