இளைஞரின் மூளையில் குடி இருந்த நூற்றுக் கணக்கான நாடாப்புழுக்கள்! ஆட்டிறைச்சி சாப்பிட்டதுதான் காரணமா?

இளைஞரின் மூளையில் குடி இருந்த நூற்றுக் கணக்கான நாடாப்புழுக்கள்! ஆட்டிறைச்சி சாப்பிட்டதுதான் காரணமா?



live-worm-in-man-head-at-chaina

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூடான ஆட்டின் இறைச்சி மற்றும் பன்றி கறி இரண்டையும் சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சில நாட்களில் அவருக்கு கடுமையான தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மேலும், தூங்கும் நேரங்களில் வலிப்பு வருவதுபோன்றும் அந்த நபர் உணர்ந்துள்ளார்.

இதனால் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றை அணுகிய அவருக்கு மருத்துவர்கள் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையின் மண்டை ஓட்டில் ஏதோ புண் போன்று இருப்பதை கண்டறிந்தனர். சாதாரண புண்தானே இது சரி ஆகிவிடும் என அந்த நபரும் அதுக்கு மேல் சிகிச்சை ஏதும் எடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

Mystry

இப்படியே நாட்கள் செல்ல செல்ல சில நாட்களில் தலைவலி தீவிரமாகி அந்த நபர் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தலையில் அதிநவீன ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஸ்கேனில் அந்த நபரின் மூளையில் நூற்றுக்கணக்கான நாடா புழுக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையில் இருந்து நாடாப்புழுக்கள் அகற்றப்பட்டுள்னன. தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துளனர்.

மூளையில் நாடாப்புழுக்கள் எப்படி வந்தது? ஆட்டிறைச்சி, பன்றி கறி சாப்பிட்டதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.