உலகம்

குளத்தில் நிர்வாணமாக குளித்த நபர்..! ஆணுறுப்பு வழியாக உள்ளே சென்ற அட்டை பூச்சி..! சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Leech enters pensioners penis while he was swimming in a pond

கம்போடியா நாட்டில் அறுவைசிகிச்சை மூலம் ஒரு வயதான மனிதனின் சிறுநீர்ப்பைக்குள் இருந்து ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டை ஒன்றை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், கடந்த சில நாட்களாக சிறுநீர் கழிக்க முயன்றபோது வலியால் அவதிப்படுவந்துள்ளார். இதனை அடுத்து கடந்த ஜூன் 22 அன்று தலைநகர் புனோம் பென்னில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அந்த நபர் சென்றுள்ளார்.

வலியின் காரணத்தை கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் அந்த மனிதனின் சிறுநீர்க்குழாய் வழியாக ஒரு கேமராவைச் உள்ளே அனுப்பி பார்த்தபோது அவரது சிறுநீர் பைக்குள் ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளத்திற்கு குளிக்க சென்ற நபர், ஆடை ஏதும் அணியாமல் குளத்தில் குளித்துள்ளார். அப்போது இந்த அட்டை அவரது ஆணுறுப்பு வழியாக உள்ளே நுழைந்து சிறுநீர் பையை அடைந்துள்ளது.

உள்ளே செல்லும்போது சிறியதாக இருந்த அந்த அட்டை உள்ளே சென்றதும் இரத்தத்தை உறிஞ்சி அளவில் பெரியதாகியுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும், அட்டையின் அளவு பெரிதானதால் வலியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் உள்ளே சென்ற அட்டையை அங்கையே வைத்து கொன்று பின்னர் அது சென்ற பாதையின் வழியாகவே அதை வெளியே எடுத்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளத்தில் குளிக்கும்போது ஆடை இல்லாமல் குளிப்பதை தவிர்ப்பது நல்லது எனவும், பல நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement