உலகம்

2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..! பார்க்கும்போதே நடுங்கவைக்கும் காட்சி.!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த பயங்கர வெடிவிபத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள துறைமுகம்  ஒன்றின் சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்துவைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த வெடிவிபத்தினால் பெய்ரூட் நகரமே உருகுலைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்தினால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில் வெடிவிபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பார்ப்போரை பதறவைக்கும் அந்த வீடியோ காட்சிகள் இதோ.


Advertisement