உலகம் லைப் ஸ்டைல்

தலைதெறிக்க ஓடிய மணப்பெண்..! அலங்கோலமாக மாறிய இடம்..! வைரல் வீடியோ காட்சி.!

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கரமான வெடிவிபத்தில் சிக்கி 130 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகம் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்துவைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் பெய்ரூட் நகரமே உருகுலைந்து போனது. பலலட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட பெய்ரூட் நகரில் மணப்பெண் ஒருவர் ஆடை அலங்காரங்களுடன் அழகான சூழலில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடி இருந்தபோது வெடி பொருள் வெடித்துள்ளது.

சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் அந்த மணப்பெண் அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார். மேலும் மிகவும் அழகாக இருந்த அந்த இடமே சில நொடிகளில் அலங்கோலமாக மாறுகிறது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement