உலகம் லைப் ஸ்டைல்

தந்தை வயது நபருடன் நடந்த திருமணம்.! தப்பித்து ஓடிய சிறுமிக்கு மீண்டும் நடந்த கொடூரம்..!

Summary:

Kenyan 12 year old girl married to two men within a month

12 வயது சிறுமி ஒருவரை தந்தை வயதுடைய நபருக்கும், 35 வயதுடைய மற்றொரு நபருக்கும் என இரண்டு முறை திருமணம் செய்துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வறுமை தலைவிரித்தாடும் நிலையில் நான்கு பசுமாடுகளை சீதனமாக பெற்றுக்கொண்டு, தங்களின் 12 வயது மகளை 51 வயது நபர் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர் கென்யா நாட்டை சேர்ந்த பெற்றோர் ஒருவர். இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாத அந்த 12 வயது சிறுமி, 51 வயது நபரை திருமணம் செய்தகையோடு அன்றே அவரது வீட்டில் இருந்து தப்பித்து மீண்டும் தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமிக்கு வேறொரு நபரை திருமணம் செய்துவைக்க திட்டமிட்டு, இந்த முறை 35 வயது நபர் ஒருவருக்கு இரண்டாவதாக பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். கென்யாவில் 18 வயதுக்கும் குறைவாக பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது சட்டப்படி குற்றம்.

இந்நிலையில் இந்த சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து சிறுவர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதற்கிடையே சிறுமியின் தந்தை, முதலில் திருமணம் செய்த 51 வயது நபர், இரண்டாவது திருமணம் செய்த 35 வயது நபர் ஆகிய மூவரும் தலைமறைவாகிஉள்ளநிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்குள் 12 வயது சிறுமி ஒருவருக்கு இரண்டுமுறை திருமணம் நடந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement