
விட்டுச்சென்ற கள்ளக்காதலியை விடாது துரத்தி வாங்கிக்கட்டிய சல்லாபக்காதலன்.. 5 பேர் கும்பல் வெறித்தனம்.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணியின் வெவ்வேறு கள்ளக்காதலால், வாலிபர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஞானபாரதி தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபரை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்ம கும்பல் கொலை செய்ய முயற்சித்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஞானபாரதி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை முயற்சி விவகாரத்தில் அருண் குமார் நாயுடு, யஷ்வந்த், கார்த்திக், விஷால் மற்றும் சஞ்சய் ஆகியோர் அடங்கிய 5 பேர் கும்பலை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், பெண் பிரச்சனையில் ஸ்ரீகாந்தை கொலை செய்ய முயற்சி நடந்தது அம்பலமானது.
அருண் குமாருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மஞ்சு ஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளனர். அருண்குமாருக்கு முன்னதாக மஞ்சு ஸ்ரீ காந்துடன் வாழ்ந்து, அவரை பிரிந்துள்ளார்.
மஞ்சு ஸ்ரீயை பிரிந்து தவித்த ஸ்ரீகாந்த், பெண்ணை குடும்பம் நடத்த அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவரம் பெண்ணின் இன்றைய காதலர் அருண் குமாருக்கு தெரியவரவே, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை கொலை செய்ய முயற்சித்தது அம்பலமானது.
Advertisement
Advertisement