உலகம்

சர்வாதிகாரி ஹிட்லர் சிறுமியை கொஞ்சும் புகைப்படம் ஏலம்; ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா?

Summary:

jermani - 2nd world war - adolp kitler


சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் ஒரு சிறுமியை அணைத்துக் கொஞ்சும் புகைப்படம் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஏலத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.3 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்தவர் அடால்ப் ஹிட்லர். இவரின் கொடுங்கோலான ஆட்சியினால் சர்வாதிகாரி என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார். ஏனென்றால் இரண்டாம் உலகப்போரின் ஏற்பட்ட பேரழிவிற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் தானும் ஒரு சராசரியான மனிதர் என்று நிரூபிக்கும் விதமாக குழந்தைகளிடத்தில் பேரன்பு கொண்ட ஹிட்லர் போர் சமயத்தில் ஒரு சிறுமியிடம் கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டார்.

photograph of hitler embracing child of jewish grandmother auctioned for $11,000

1933ஆம் ஆண்டு ஹென்றிச் ஹாப்மேன் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படத்தில்   ஹிட்லர் கையொப்பம் இட்டிருக்கிறார். புகைப்படத்தில் இருப்பது 1943ஆம் ஆண்டு போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ரோசா பெர்னைல் நைனா என்பது தெரியவந்துள்ளது. அப்போது அவருக்கு வயது 6 வயது நிரம்பியிருந்தது.

ஆனால் இந்த புகைப்படமானது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லர் ஒரு அன்பான தலைவர் என்று பிரச்சாரம் செய்வதற்கு எடுக்கப்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏலத்தில் விடப்பட்ட இந்த புகைப்படமானது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 8.3 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.


 
 


Advertisement