உலகமெங்கும் கொரோனா அச்சுறுத்தல்: ஆனால் ஒலிம்பிக் 2020 திட்டமிட்ட படி நடைபெறும்! ஜப்பான் பிரதமர் என்ன கூறியுள்ளார்?

உலகமெங்கும் கொரோனா அச்சுறுத்தல்: ஆனால் ஒலிம்பிக் 2020 திட்டமிட்ட படி நடைபெறும்! ஜப்பான் பிரதமர் என்ன கூறியுள்ளார்?japan PM talk about olympic

டோக்கியோ ஒலிம்பிக் 2020 திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே உறுதிப்படுத்தினார்.

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகத்தையே உலுக்கி வருகிறது.  ஜப்பானிலும் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடு குறித்து ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கொரோனா பாதிப்பின்றி ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசினேன். அப்போது ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்த ஜப்பானும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது என்று ஒப்புக் கொண்டோம். .

olympic

போட்டியை தள்ளிவைப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை’ என்றார். நாங்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக சுகாதார அமைப்பு உடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே உறுதிப்படுத்தினார்..