ஆறுதல் செய்தி..! 25 நாட்களுக்கு பிறகு இத்தாலியில் குறைந்துள்ள கொரோனா பாதிப்பு!

ஆறுதல் செய்தி..! 25 நாட்களுக்கு பிறகு இத்தாலியில் குறைந்துள்ள கொரோனா பாதிப்பு!


Italy corono cases started reducing

இத்தாலியில் நேற்று செவ்வாய்க்கிழமை 3039 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களில் இத்தாலியில் பதிவாகியுள்ள குறைந்த எண்ணிக்கை இதுதான்.

சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் அமரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை மிகவும் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.

இத்தாலியில் இதுவரை 135,586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 17,127 உயிரிழப்பும் 24,392 பேர் குணமாகியும் உள்ளனர். பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு பிறகு தான் இத்தாலியில் இந்த மிகப்பெரிய தாக்கம் ஏற்பட துவங்கியது.

italy

மார்ச் 9 ஆம் தேதி முதல் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தாலியில் கடந்த மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு 25 நாட்களாக பதிவான கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான 3039 தான் குறைவான எண்ணிக்கை ஆகும்.

நேற்று பதிவான இறப்புகள் 604, இது இதற்கு முந்தைய நாளான 636 யை விட குறைந்துள்ளது. மார்ச் 17 முதல் அந்நாடில் பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கு 4,050 - 6,557 என்ற வகையிலேயே இருந்துள்ளது. தற்போது கடந்த 2 நாட்களாக தான் இந்த எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.