#சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!
ஆல்ப்ஸ் மலைத்தொடரில்.. வரும் 15 வருடங்களில் பனிப்பாறைகள் இல்லாமல் போய்விடும்; அதிர்ச்சி அளிக்கும் எச்சரிக்கை..!
அடுத்த 15 வருடங்களில் ஜெர்மனியில் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனி, அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியில் உள்ள பனிப்பாறைகள் சமீப காலமாக கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் மூவாயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான ஷ்னீஃபெர்னர், சமீப வருடங்களாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகிறது. கடந்த பத்து வருடங்களில் அந்த பனிப்பாறை தனது பெரும்பான்மையான பகுதியை இழந்துள்ளது.
இந்த வருடம் நிலவி வரும் அதிக வெப்பநிலை மற்றும் குறைவான மழைப்பொழிவு போன்றவை பனிப்பாறைகள் உருகுவதை வேகப்படுத்தியுள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது, ஆல்பைன் பனிப்பாறைகள் உருகுவதை கொஞ்சம் குறைக்கும், என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.