இந்தியா

என்கவுண்டர் செய்யப்பட்ட நால்வரின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Hyderabad

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு.

இதனையடுத்து இந்த வழக்கு சம்மந்தமாக முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

அதனை அடுத்து வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றபோது, குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதால் குற்றவாளிகளை போலீசார், சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியானது. இந்த தண்டனை சரியானது என ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது சுட்டுக் கொள்ளப்பட்ட நான்கு பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குற்றவாளிகளின் உடலில் குண்டுகள் துளைத்திருந்த போதிலும் உடலில் குண்டுகள் தங்கவில்லை. 

அதில் முக்கிய குற்றவாளியான முகமது உடலில் 4 குண்டுகளும், சிவா, சின்ன கேசவலு உடலில் 3 குண்டுகளும், நவின் உடலில் 1 குண்டும் துளைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது உடலில் குண்டுகள் இல்லை. குண்டுகள் இருந்தால் மட்டுமே அது யாருடைய துப்பாக்கியிருந்து வந்தது என்று கூற முடியும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

 


Advertisement