உலகம்

கிணற்றை தோண்டிய பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Summary:

Human skeletons found in srilanks bore well

இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் பரப்பமறிப்பு பணிக்காக கிணற்றை தோண்டிய போது பணியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கையின் மட்டக்களப்பு பகுதில் உள்ள சின்ன சவுக்கடி என்ற பகுதியில் கடற்கரையை ஒட்டி கிணறு ஓன்று இருந்துள்ளது. அந்த கிணற்றை பராமரிப்பதற்காக கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்றுவந்துள்ளது.

பணியாளர்கள் கிணற்றை தோண்டும்போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றை தோண்டும் போது வரிசையாக மனித எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் கிணற்றின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே கிணற்றின் உரிமையாளர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் எலும்பு கூடுகளை கைப்பற்றி தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement