உலகம் Covid-19

அசந்து தூங்கியவரை பிணம் என நினைத்து உயிருடன் எரித்த சம்பவம் உண்மையா.? விசாரணையில் அம்பாலான உண்மை.

Summary:

Hoax about funeral home worker cremated alive while taking a nap

கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டம் ஆடிவரும் நிலையில், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவின் கொடூரம் அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்பட்டுவருகிறது. இதனை மையமாக கொண்டு பொய்யான தகவல் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

"Weekly Inquirer" என்ற இணையதளம் வெளியிட்ட தகவலில்,

நியூயார்க்கில் உள்ள மயாணங்களில் சடலங்கள் குவிந்து வருகிறது. இறுதி சடங்கு செய்து, எரியூட்டும் தொழிலார்கள் 16 முதல் 18 மணி நேரம் பணி செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனவும் 

இந்நிலையில், இறுதி சடங்கு செய்யும் மைக்கேல் என்ற ஊழியர் தொடர்ச்சியாக 16 மணி நேரம் பணி செய்ததால் அசதியில் மயானத்தில் இருந்த ஸ்ட்ரெச்சரில் படுத்து தூங்கிவிட்டார். மைக்கேல் தூங்குகிறார் என்று தெரியாமல், அவர் இறந்தவர் என நினைத்து புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் ஒருவர் மைக்கேலை உயிருடன் மின்னூட்டி உள்ளே அனுப்பி தகனம் செய்துவிட்டார் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், 1400 டிகிரி வெப்பநிலையை மைக்கேல் உடல் சந்தித்ததும் இறப்பதற்கு முன் அவர் அலறியுள்ளார். இருப்பினும் வெறும் 14 நொடிகளில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மைக்கேல் சாம்பலாக மாறிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடாத்திவருகின்றனர் என அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் உண்மை என நினைத்து பலரும் தங்கள் வருத்தத்தையும், சோகத்தையும் தெரிவித்துவந்தனர். ஆனால், இந்தியா டுடே செய்தி நிறுவனம் நடத்திய உண்மை கண்டறியும் சோதனையில் இந்த தகவல் பொய்யான தகவல் எனவும், இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை எனவும் தற்போது தெரியவந்துள்ளது.


Advertisement