தந்தை உயிரிழந்தது தெரியாமல், இறுதிச்சடங்கில் 1 வயது மகள் செய்த காரியம்! கண்கலங்கவைக்கும் புகைப்படங்கள்!

தந்தை உயிரிழந்தது தெரியாமல், இறுதிச்சடங்கில் 1 வயது மகள் செய்த காரியம்! கண்கலங்கவைக்கும் புகைப்படங்கள்!


heartbreaking-scenes-as-rural-firefighter-andrew-odwyer

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாகவே காட்டுத்தீ பெருமளவில் பரவி வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரும் தீவிரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியா மேற்கு சிட்னியை சேர்ந்த தன்னார்வலர் ஆண்ட்ரூ மற்றும் ஜியோப்ரி கியாடோன் ஆகியோரும் இத்தகைய தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் புதர் தீயை அணைக்கச் சென்ற போது அவரது வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக பெரிய மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ உயிரிழந்தார்.

australia

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் அவரது மனைவி ஜெனி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 

australia

இந்நிலையில் ஆண்ட்ரூவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவரது 1வயது மகள் தனது தந்தையின் ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு சவப்பெட்டியை சுற்றிசுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அங்கும் இங்கும் விளையாடி கொண்டு இருந்துள்ளது இதனை கண்ட அனைவரும் கண் கலங்கியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.