உலகம் லைப் ஸ்டைல்

அதிசயம்! தானாக பற்றி எரியும் பச்சை மரம்...! உலகளவில் வைரலாகும் வீடியோ!!

Summary:

Green tree fire themselves video goes viral

பொதுவாக மனிதர்கள் செய்யும் தவராலையோ அல்லது இயற்கையின் காரணமாகவோ காட்டு தீ ஏற்படுவது வழக்கம். சமீபத்தில்கூட உலகத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடு தீ பற்றி எரிந்து பல மரங்கள் கருகியதோடு பல்வேறு உயிரினங்களும் தீக்கிரையாகின.

பொதுவாக மரங்கள் தீப்பிடிக்கிறதென்றால் அது பட்ட மரமாக இருக்கலாம், ஆனால் இந்த வீடியோவில் பச்சை பச்சை மரங்களுக்கு நடுவே பச்சை பசேலென இருக்கும் பச்சை மரம் ஒன்றில் பிளவு ஏற்பட்டு அந்த மரம் தீப்பற்றி எரிகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஒருவேளை மனித செயலால் இந்த மரம் தீப்பற்றி எறிந்திருக்கலாம் எனவும், இல்லையெனில் மின்னல் தாக்கியதில் இந்த மரம் எறிந்திருக்கலாம், தீ எப்படி பற்றியது என்று தெரியவில்லை, ஆனால் மரம் எரிவது மட்டும் உண்மை என அந்த வீடியோவை பதிவிட்ட சோஃபையன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவிட சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இதுவரை 18 . 3 மில்லியனுக்கு அதிகமானோர் இந்த விடீயோவை பார்த்துள்ளனர். பலர் இது பொய் என்றும், கிராபிக்ஸ்சாக இருக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.Advertisement