உலகம் லைப் ஸ்டைல்

பதறவைக்கும் வீடியோ காட்சி: 23 வது மாடியின் விளிம்பில் தலைவிரி கோலமாக நடந்துசென்ற சிறுமி.! வைரல் வீடியோ.!

இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ காட்சி ஒன்று பார்ப்போரை பதறவைக்கும் விதமாக உள்ளது.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல் தோன்றும் அந்த வீடியோவில், 15 வயது நிரப்பிய சிறுமி ஒருவர் மிகவும் உயரனமான கட்டிடத்தின் வெளிப்புற விளிம்பில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் நடந்துசென்ற காட்சி பார்ப்போரை அச்சமடையவைத்துள்ளது.

கட்டிடத்தின் உச்சியில் ஏதோ ஒரு உருவம் தெரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் 15 வயது சிறுமி ஒருவர் தலைவிரி கோலத்துடன் கட்டிடத்தின் விளிம்பை மூன்று முறை சுற்றிவந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர்.

அண்ணன் - தங்கை இடையே நடந்த ஒரு போட்டியின்  காரணமாக அந்த சிறுமி கட்டிடத்தை 3 முறை சுற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரை போலீசார் எச்சரித்துள்ளனர். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி இப்படி நடக்காது எனவும் சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.


Advertisement