இந்தியா உலகம்

சூப்பர் மார்க்கெட்டில் திடீரென அலறிய மக்கள்!! ஹாலிவுட் படம்போல் நடந்த காட்சி.. வைரல் வீடியோ..

Summary:

சூப்பர் மார்கெட்டுக்குள் திடீரென நுழைத்த இராட்சத பல்லி ஒன்றால் மக்கள் அதிர்ச்சி அடைந்த சம்

சூப்பர் மார்கெட்டுக்குள் திடீரென நுழைத்த இராட்சத பல்லி ஒன்றால் மக்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது திடீரென இராட்சத பல்லி ஒன்று நுழைந்துள்ளது. உருவத்தில் மிகப்பெரிதாக இருந்த அந்த இராட்சத பல்லியை பார்த்ததும் அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட தொடங்கினர்.

பின்னர் அந்த இராட்சத பல்லி, அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டபடி அலமாரி ஒன்றின் மீது ஏறி அலமாரியின் மேல்மட்டத்திற்கு சென்று படுத்துக் கொண்டது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற இந்த காட்சியை பார்த்த அங்கிருந்த மக்கள், இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், "இதுதான் உண்மை காட்சில்லா எனவும், பல்லி சூப்பர் மார்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்திருக்கும்" எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement