உலகம்

பதறவைக்கும் வீடியோ காட்சி.. கடலில் விழுந்த விமானத்தின் திக் திக் நிமிடம்.. கொண்டாத்தின்போது அரங்கேறிய சோகம்..

Summary:

சாகசத்தில் ஈடுபட்ட விமானம் கடலில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சாகசத்தில் ஈடுபட்ட விமானம் கடலில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவிப்பதற்காக அமெரிக்காவின் மெக்சிகோவை சேர்ந்த தம்பதி ஒருவர் மிகவும் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, 2 சிரியவகை விமானத்தை வாடகைக்கு எடுத்த அவர்கள், தங்கள் உறவினர்களை கடற்கரைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி உறவினர்களும் அங்கு வர, இரண்டு விமானங்களும் சாகசத்தில் ஈடுபட தொடங்கியது. பின்னர் அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்க போகிறது என்பதை தெரியப்படுத்தும்விதமாக விமானத்தில் இருந்து பிங்க் நிற புகையை விமானிகள் வெளியேற்றியுள்ளனர்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் துள்ளிக்குதித்தனர். ஆனால் அடுத்த நொடியே, சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு விமானங்களில் ஒன்று தலைகுப்புற கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த பைலட் மற்றும் கோபைலட் இருவரும் அங்கையே உயிரிழந்தனர்.

இந்த காட்சிகளை அங்கிருந்தார்கள் வீடியோவாக பதிவு செய்துருந்தநிலையில், தற்போது விமானம் கடலில் விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement