ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை! உணவில்லாமல் மண்ணை தான் சாப்பிடுகிறோம்! கலங்க வைக்கும் காசா சிறுவனின் பரிதாப வீடியோ!



gaza-boy-eating-mud-video

காசா பகுதியில் உணவின்றி தவிக்கும் ஒரு சிறுவனின் பரிதாபநிலை மிகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல், பாலஸ்தீனில் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் விளைவாக 55,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

வீடுகளை இழந்த மக்களின் துயரம்

இந்த தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக மாறியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் காசா பகுதியில் உணவு மற்றும் மருந்துகளை அனுப்பும் அனைத்து வழிகளும் இஸ்ரேலால் முடக்கப்பட்டுள்ளன.

பஞ்சம் மற்றும் பட்டினி நிலை மோசமாகிறது

இதனால் அங்கு பஞ்ச நிலை ஏற்பட்டு, மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, மக்கள் உதவி பொருட்கள் பெறச் சென்றபோது, இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: எந்தெந்த ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்த பாபா வாங்கா! 2025-ல் வெடிக்குமா மூன்றாம் உலக போர்? கணிப்பால் நிலைகுலையும் உலகம்...

சிறுவனின் உருக்கமான அழுகுரல்

இந்நிலையில், ஒரு சிறுவன் உருக்கமாக கூறும் வீடியோ இணையத்தில் உணர்ச்சி பூர்வமாக பரவி வருகிறது.

அந்த சிறுவன் கூறியுள்ளதாவது,

"காசாவில் சாப்பிட எதுவுமில்லை. ஒவ்வொரு நாளும் உணவுப் பொருட்கள் கொண்ட டிரக்குகள் வந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மண்ணை சாப்பிட்டு இருக்கிறோம். உணவு சமைக்க மாவும் இல்லை. தயவு செய்து எங்களுக்கு கருணை காட்டுங்கள்."

ஒரு ரொட்டிக்கே ரூ.570 விலை

இப்போது காசாவில் ஒரு ரொட்டிக்கான விலை 5.30 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.570. அதுவும் மிகச் சிறிய துண்டாகவே கிடைக்கிறது. "அந்த அளவு எங்களுக்கு போதவில்லை" என்று சிறுவன் வருத்தத்துடன் கூறியுள்ளான்.

இதையும் படிங்க: புது மாடல் பேமிலி பைக்..ஒரே பைக்கில் 10 பேர்! பின்னாடி எல்லாம் குழந்தைகள் தான்! . அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்!