உலகம் லைப் ஸ்டைல் Covid-19

சிகரெட் வாங்க பிரான்ஸ் நாட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு நடந்து சென்ற நபர்.! போகும் வழியில் நடந்த சோகம்.

Summary:

Frenchman caught trying to walk to Spain to buy cigarettes

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகரெட் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் ஸ்பெயின் நாட்டிற்கு நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நபர் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் கடைகளில் சிகரெட் வாங்க முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு சிகரெட் எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால் தனது அண்டை ஸ்பெயின் நாட்டிற்க்கு சென்று சிகரெட் வாங்க முடிவு செய்துள்ளார். இதனால் தனது காரில் பயணம் செய்த அந்த நபரை அதிகாரிகள் ஒரு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் தனது காரை அங்கையே விட்டுவிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் மலைப்பகுதி வழியாக நடந்து சென்று ஸ்பெயின் நாட்டில் சிகரெட் வாங்க முடிவு செய்து அதன்படி கடினமாக மலைப்பாதையில் நடந்துசென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரோடையில்  தவறி விழுந்துள்ளார்.

பின்னர் தனது நிலை குறித்து அந்நாட்டின் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் ஹெலிகாப்டர் மூலம் சென்று அந்த நபரை மீட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்ற காரணத்திற்காக 146 டாலர் அபராதம் விதித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை விட அண்டைநாடான ஸ்பெயினில் பெட்ரோல், சிகரெட், உணவு, மது போன்றவை குறைந்த விலையில் கிடைப்பதால் தெற்கு பிரான்ஸ் பகுதியில் இருக்கும் மக்கள் அதிகமுறை இப்படி நாடு விட்டு நாடு செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement