அமெரிக்கா க்ளப்பில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி... கொலைகாரனுக்கு வலைவீச்சு!four-people-were-killed-in-the-shooting-at-the-entertai

கேளிக்கை விடுதியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மெரிலேண்ட்  மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் அமைந்துள்ள கிரெட்னா அவன்யூ என்ற பகுதியில் செயல்பட்டு வந்த கேளிக்கை விடுதிக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்திருக்கிறார். அவரைக் கண்டதும் அங்குள்ள மக்கள் பதற்றத்தில்  நாலாபுறமும் சிதறி ஓடி இருக்கின்றனர்.

America

கேளிக்கை விடுதியில் இருந்த நபர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த அந்த நபர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து எல்லோரையும் கண்மூடித்தனமாக சுற்றுள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

America

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க முயன்ற போது அவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 25 நபர்களை காவல்துறை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது . தப்பியோடிய கொலைகாரனையும் தீவிரமாக தேடி வருகிறது.