
First baby born in 2020
பல்வேறு ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் பிறந்த 2019 ஆம் ஆண்டு நேற்றுடன் முடிவடைந்து அதே எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகளுடன் 2020 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியம் கைகூட, உங்கள் முயற்சியில் வெற்றிபெற தமிழ் ஸ்பார்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் ஒரு சுவாரசியமான விஷயம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 2020 இல் எந்த நாட்டில் முதல் குழந்தை பிறந்தது என்பது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த புத்தாண்டில் முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஷார்ஜாவில் உள்ள "அல் ஜாஹ்ரா" என்ற மருத்துவமனையில் இன்று 12:01 மணியளவில் ஹலீமா ஹஸான் அல் சாம்ஷி மற்றும் வாலீத் முஹாரி என்னும் தம்பதியினருக்கு அந்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு "ஹாசன்" என்று பெயர் வைத்துள்ளனர்.
அதேபோல், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நள்ளிரவில் Mitieli Digitaki என்னும் குழந்தை முதல் முதலில் பிறந்துள்ளதாகவும், இன்று மட்டும் உலகம் முழுவதும் சுமார் 392,078 குழந்தைங்கள் பிறகும் எனவும் UNICEF அறிக்கை தெரிவிக்கிறது.
Advertisement
Advertisement