உலகம்

வாக்...! உணவில் கிடந்த சிகரெட் துண்டு..! சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

Finding a cigarette butt in his stew watches in horror as he see the chef SPIT

சீனாவில் வாடிக்கையாளர் ஒருவர் தனது குழந்தைகளுடன் உணவகத்திற்கு சென்று உணவு ஆர்டர் செய்தநிலையில், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவு சுவையாக இல்லை என திருப்பி கொடுத்துள்ளார். கொடுத்த உணவுக்கு பதிலாக அந்த வாடிக்கையாளருக்கு வேறு உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக வந்த உணவை குழந்தைகள் சாப்பிட தொடங்கியபோது உணவில் சிகரெட் துண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபர் இதுகுறித்து உணவை பரிமாறியவரிடம் கேட்டுள்ளார். அவரோ தெரியாமல் விழுந்திருக்கும் என காரணம் கூற, கடுப்பான வாடிக்கையாளர் உணவகத்தின் மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உணவகத்தின் சமையல் அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. உணவை தயார் செய்யும் நபர் அந்த உணவில் எச்சில் துப்பும் காட்சி பதிவாகியிருந்து. இதனை அடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த வாடிக்கையாளர் புகார் கொடுத்ததை அடுத்து அந்த உணவகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement