உலகம்

என்ன ஒரு பாசம்... புதிதாக பிறந்த பெண் குழந்தையை வரவேற்க தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்....! வைரலாகும் வீடியோ காட்சி இதோ...

Summary:

என்ன ஒரு பாசம்... புதிதாக பிறந்த பெண் குழந்தையை வரவேற்க தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்....! வைரலாக வீடியோ காட்சி இதோ...

புதிதாக பிறந்த பெண் குழந்தையை வரவேற்க  தந்தை ஒருவர் ஹெலிகாப்டரை வாடகைக்கு பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஷால் ஜரேகரரின்  குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்பதால், தனக்கு  பெண் குழந்தை  பிறந்ததை  கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியை ஹெலிகாப்டரில் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.தற்போது இந்த  வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி  வருகிறது.

 


Advertisement