கொரோனா பயத்தால் பணத்தை கட்டு காட்டாக சாலைகளில் வீசினார்களா இத்தாலி மக்கள்.? உண்மை என்ன.?

கொரோனா பயத்தால் பணத்தை கட்டு காட்டாக சாலைகளில் வீசினார்களா இத்தாலி மக்கள்.? உண்மை என்ன.?


Fact check italy people throwing money on road

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்புகளை சந்தித்துவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 43 ஆயிரம் பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவிய இடமான சீனாவை விட அமெரிக்காவும், இத்தாலியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் இதுவரை 12,428 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். கொரோனவை நினைத்து இத்தாலி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

corono

இந்நிலையில், கொரோனா பயம் காரணமாக இத்தாலி மக்கள் தங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கட்டு காட்டாக சாலைகளில் தூக்கி வீசுவதாகவும், சாலை முழுவதும் பணமாக கிடப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இது பொய்யான தகவல் என்றும், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் காட்சி இத்தாலியில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டில் பணவீக்கம் ஏற்பட்ட போது அந்நாட்டு மக்கள் பணத்தை சாலைகளில் வீசியபோது எடுக்கப்பட்ட படம் எனவும் தெரியவந்துள்ளது.

கொரோனா காரணமாக இத்தாலி மக்கள் பணத்தை சாலைகளில் வீசுகிறார்கள் என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்.