மார்க்கெட்டிங் வேலைக்கு 140 பேரில் தனியொருவராக தேர்வான இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.!

மார்க்கெட்டிங் வேலைக்கு 140 பேரில் தனியொருவராக தேர்வான இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.!


England Youngster Got Marketing Job Using New Technic to See HR Team

இங்கிலாந்து நாட்டில் உள்ள யார்க்ஷையர் நகரில் செயல்பட்டு வரும் இன்ஸ்டன்ட் பிரிண்ட் நிறுவனம், தனது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேளைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது. இந்த பணிக்கு 140 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், பணியாளர்களை தேர்வு செய்ய நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, மார்க்கெட்டிங் வேளைக்கு ஆக்கபூர்வமாக, வித்தியாசமான முறையில் விண்ணப்பித்தால் எப்படி இருக்கும்? என்ற யோசனை 24 வயதாகும் இளைஞரான ஜோநாதன் ஸ்விப்டுக்கு தோன்றியுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்ற இளைஞர், ஒவ்வொரு காரிலும் தனது பணி விண்ணப்பத்தை வைத்துள்ளார்.

அலுவலகத்தில் இருந்தவாறு இதனை கவனித்த அதிகாரிகள், காவலாளியை அழைத்து இளைஞர் என்ன செய்கிறார்? என்று கேட்டுள்ளனர். காவலாளி அவர் பணி விண்ணப்பத்தை வித்தியாசமான முறையில் வழங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.  இவ்வாறான கிரியேட்டிவ் அறிவாளியே எங்களுக்கு தேவை என்பதை உணர்ந்த அதிகாரி, இளைஞர் ஜோநாதனுக்கு வேலையை வழங்கினார்.