உலகம்

உலகையே அதிரவைத்து, கண்ணீரில் மூழ்கடித்த ஒற்றை புகைப்படம்.! இந்த கொடூரம் எங்கு நடந்தது தெரியுமா?

Summary:

elephant shock image in south africa

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ஜெஸ்டின் சுலிவான். பிரபல ஆவணப்பட இயக்குனரான இவர் அண்மையில் புகைப்படம் எடுப்பதற்காக போட்ஸ்வானா என்ற வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வனப்பகுதியில் அவர் தனது ட்ரான் கேமராவை மேலே பறக்க விட்டு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி உலகையே பெருமளவில் அதிர வைத்துள்ளது. 

ஏனெனில் இந்த புகைப்படத்தில் யானையின் தலை முழுமையாக சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும்   அதன்  தும்பிக்கை தனியாக வெட்டப்பட்ட நிலையில் கொடூரமாக இறந்து கிடந்துள்ளது. 

மேலும் இது குறித்து புகைப்பட இயக்குனர் ஜெஸ்டின் கூறுகையில், உலகையே அதிரவைத்த இந்த புகைப்படத்துக்கு நான் டிஸ்கனெக்சன் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் மேலே இருந்து பார்த்தால் தான் புகைப்படத்தின் வலி தெரியும். 

டிஸ்கனக்ஷன் என்பது யானைக்கும் அதன் துண்டித்து கிடக்கும் தும்பிக்கைக்கும் இடையே உள்ளது மட்டுமில்லை. விலங்குகள் கொலை செய்யப்படுவதும், அதைநாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும்  இடையே உள்ளதும்தான் என தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement