உலகம் காதல் – உறவுகள்

என்னடா இவருக்கு வந்த சோதனை ,பெண்ணுடன் அமர்ந்து சாப்பிட்டதால் பிடித்து ஜெயிலில் போடப்பட்ட வாலிபன் , என்ன காரணம் தெரியுமா?

Summary:

பெண்ணுடன் அமர்ந்து சாப்பிட்டதால் பிடித்து ஜெயிலில் போடப்பட்ட வாலிபன் , என்ன காரணம் தெரியுமா?

சவுதி அரேபியாவில் பெண்ணுடன் அமர்ந்து  உணவு அருந்திய எகிப்து  இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள எகிப்திய ஹோட்டல்  ஒன்றில்  இளைஞன் ஒருவன் , அவருடன் பணிபுரியும் சக பெண் பணியாளர்  உடன் அமர்ந்து  உணவை பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர் .

அவ்வாறு அவர்கள் சாப்பிடும் போது வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர் .

30 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் புர்கா அணிந்த சவூதி பெண் எகிப்திய இளைஞருடன் சிரித்து  உரையாடிக்கொண்டே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார் .மேலும்  அதில் இறுதியில் அந்த பெண் அந்த இளைஞருக்கு உணவு ஊட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

சவுதி பெண்ணிடம் ஆ ஊட்டிகொண்ட எகிப்து வாலிபர் கைது

அந்த வீடியோவானது வைரலாகி சில நிமிடங்களிலேயே அதிகமாக பகிரப்பட்டது.

  சவுதி நாட்டு சட்டப்படி பெண்கள் கணவர்,சகோதரர் அல்லது தனது மகன் இல்லாமல் வேறு யாருடனும் உரையாட கூடாது,உணவகங்களுக்கு  குடும்பத்துடன் வருபவர்கள் மற்றும் தனியாக வரும் ஆண்கள் தனி இடத்தில் அமர்ந்து தான் உணவு உண்ண வேண்டும். 

இந்நிலையில் உணவகத்துக்கு  விரைந்த போலீசார் சட்டத்தை மீறியதாக அந்த  எகிப்து இளைஞனை அதிரடியாக கைது செய்தனர். 
 இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 


Advertisement