திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.! 7 பேர் பரிதாப பலி.! குரோசியாவில் பதட்டம்.!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.! 7 பேர் பரிதாப பலி.! குரோசியாவில் பதட்டம்.!


eaarthquake in Croatia

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏழு பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல்  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் தலைநகர் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகள் இடிந்து விழுந்தன. வர்த்தக கட்டிடங்கள் சரிந்தன. ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகள் நீடித்து கொண்டிருந்ததால், மக்கள் எச்சரிக்கையாக வீட்டுக்கு செல்லாமல் வெட்டவெளியில் தங்கி இருந்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்   குரேஷியாவின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பெட்ரீனியா நகரில் ஏற்பட்ட சேதங்களை  பார்வையிட்டனர். பாதி நகரம் அழிந்துவிட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் பெட்ரீனியா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.