வீடியோ: ரயில் தண்டவாளத்தில் தாறுமாறாக வந்த கார்.. கார் கதவை திறந்து பார்த்தால் 25 வயசு பொண்ணு.. அதிர்ச்சி சம்பவம்

வீடியோ: ரயில் தண்டவாளத்தில் தாறுமாறாக வந்த கார்.. கார் கதவை திறந்து பார்த்தால் 25 வயசு பொண்ணு.. அதிர்ச்சி சம்பவம்


drunk-women-drove-car-on-railway-track-viral-video

குடிபோதையில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச்சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஸ்பெய்ன் நாட்டின் மலாகா பகுதியில் அமைந்துள்ள ரயில் சுரங்க பாதையில் கார் ஒன்று மாட்டியிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் ரயில் தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டதோடு அந்த காரை ஓட்டிவந்த 25 வயது இளம் பெண்ணை கைது செய்தனர்.

viral video

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக குடித்திருந்ததை அடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் சாலையில் இருந்து காரை தண்டவாளத்தில் திரும்பியதும், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் காரை ஓட்டிவந்த சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது...