உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன! டிரம்ப் அதிரடி!

உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன! டிரம்ப் அதிரடி!


donald trump said We have the most powerful weapons in the world


அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் செயல், ஈரான் ராணுவத்தை மேலும் கோபத்தை அதிகரித்தது. இந்நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இரவில் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இத்தாக்குதலில் எந்தளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அமைச்சர் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரது ட்விட்டர் பதிவில், '2 அமெரிக்க தளங்கள் மீது ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடப்பதால் நாளை அறிக்கை வெளியிடுகிறேன். மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன என  பதிவிட்டுள்ளார்.