உலகம் லைப் ஸ்டைல்

கண்கலங்கவைக்கும் சம்பவம்.. தினமும் கால் கடுக்க காத்திருக்கும் குட்டி நாய்.. பின்னால் உள்ள சோக சம்பவம்..

Summary:

வெள்ளபெருகில் சிக்கி காணாமல் போன தனது உரிமையாளருக்காக அவரது வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்

வெள்ளபெருகில் சிக்கி காணாமல் போன தனது உரிமையாளருக்காக அவரது வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமடம் என்ற இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். பலரின் நிலைகுறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த மின் நிலையங்களில் பணியாற்றி வந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

இந்நிலையில் தபோவன் அணைக்கட்டு பகுதியில் வேலைபார்த்துவந்த தனது உரிமையாளர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் காணாமல்போனநிலையில், தனது உரிமையாளரின் வருகைக்காக பிளாக்கி எனும் அவரது இரண்டு வயது வளர்ப்பு நாய் ஒன்று கடந்த மூன்று நாட்களாக தனது உரிமையாளர் வேலைபார்த்துவந்த பகுதியில் அவருக்காக காத்துள்ளது.

காணாமல் போன தனது உரிமையாளரை தேடி அந்த நாய் தினமும் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்த வண்ணம் உள்ள காட்சி, அந்த பகுதியில் உள்ளவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement