காரில் பெண்ணின் அருகில் இருந்த நாய் செய்த மோசமான வேலை. கதறி துடித்த இளம் பெண். - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

காரில் பெண்ணின் அருகில் இருந்த நாய் செய்த மோசமான வேலை. கதறி துடித்த இளம் பெண்.

அமெரிக்காவில் பிரண்ட் பாரக்ஸ்(79) என்ற நபரும், டீனா என்ற அவரது பெண் உதவியாளரும் காரில் பயணம் செய்துள்னனர். காரின் பின் ஷீட்டில் டீனா அருகில் பிரண்ட் வளர்க்கும் மோலி என்ற நாயும் பயணம் செய்துள்ளது.

கார் வேகமாக சென்றுகொண்டிருக்கையில் ஒரு ரயில்வே கிராஸிங்கில் கார் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, காரில் இருந்த நாய் கோவத்தில் குறைக்க ஆரம்பித்ததோடு அங்கும், இங்கும் தாவியுள்ளது. இதில் பிரண்ட் லோட் செய்து வைத்திருந்த துப்பாக்கியில் நாயின் கால் பட்டு அது வெடித்துள்ளது.

இதில், துப்பாக்கி குண்டு டீனாவின் தொடையில் பட்டு இரத்தம் கொட்டியுள்ளது. இதனால் பதறிப்போன பிரண்ட் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் டீனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பிரண்ட் போலீசாரிடம் விளக்கி கூறியதோடு, இனி தான் துப்பாக்கியை வெடிக்கும் நிலையில் வைக்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo