வீடியோ: வரலாம்!! வரலாம்!! போதும் நிப்பாட்டு!! காரை பார்க் செய்ய உரிமையாளருக்கு உதவும் நாய்.. வைரல் வீடியோ

வீடியோ: வரலாம்!! வரலாம்!! போதும் நிப்பாட்டு!! காரை பார்க் செய்ய உரிமையாளருக்கு உதவும் நாய்.. வைரல் வீடியோ


dog-helps-his-owner-to-park-car-viral-video

நாய் ஒன்று அதன் உரிமையாளர் அவரது காரை பார்க் செய்வதற்கு உதவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள ஜீவன் என்பார்கள். அதேநேரம் பல நேரங்களில் நாய்கள் மிகவும் புத்தி கூர்மையுடன் நடந்து மனிதர்களையே வியக்கவைப்பதும் உண்டு. அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.

Humor And Animals என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள வீடியோ ஒன்றில் நாய் ஒன்று அதன் உரிமையாளர் அவரது காரை பார்க் செய்வதற்கு உதவுகிறது. சுமார் 8 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் கார் ஒன்று பார்க் செய்வதற்காக பின்னோக்கி வந்துகொண்டிருக்கிறது.

அப்போது நாய் ஒன்று வரலாம் வரலாம் என்பதுபோல் தனது கால்களை ஆடிக்கொண்டும், அந்த கார் சரியான இடத்திற்கு வந்தபிறகு அந்த நாய் குறைந்துகொண்டே தனது உரிமையாளருக்கு சிக்னல் கொடுக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.