திருமணத்தில் மணப்பெண்ணிற்கு ஒரு நாய் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?- வீடியோ உள்ளே - TamilSpark
TamilSpark Logo
உலகம்

திருமணத்தில் மணப்பெண்ணிற்கு ஒரு நாய் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?- வீடியோ உள்ளே

இந்தியர்களைக் காட்டிலும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் முறையில் வெளி நாட்டினர் சற்று கூடுதலானவர்கள்.செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பது, ஃபேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்குவது, அவற்றிற்கு மனிதர்களைப் போல் பல பயிற்சி வகுப்புகள் கொடுப்பது, நாய்களுக்கென ரெஸ்டாரண்ட், காரில் தனி இடம், பஞ்சு மெத்தை கொண்ட ஏசி அறை என வெளிநாட்டினர் மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளையும் கவனிப்பார்கள்.

அமெரிக்காவில் லாஞ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சாரா கார்சன் என்னும் பெண் ’மம்மி’ என்ற பெயர் கொண்ட நாயை வளர்த்து வருகிறார். இவர் அமெரிக்காவில் செலிபிரிட்டி நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் வளர்க்கும் மம்மி நாய் சாராவின் திருமணத்தின் போது பரிசாக நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தியது.

அதன் பிறகு சாராவோடு இணைந்து ஆடிய நடனம்தான் சுற்றியிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo