உலகம் லைப் ஸ்டைல்

வயிற்றுவலியால் துடித்த பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Doctors left knife in stomach while operation

ரஷ்யாவில் உள்ள வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் எலிட்டா. இவருக்கு அடிக்கடி அடி வயிற்றில் வெளிவந்துள்ளது. இதனால் மருத்துவர்களை அணுகிய எலிட்டா கடந்த 23 வருடங்களாக வலிக்கான மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். வலி வருவது, மருத்துவரை சந்திப்பது, மாத்திரை சாப்பிடுவது. இப்படி மாறி மாறி 23 வருடங்களாக எலிட்டா அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும், கல்லீரலில் தோற்று இருந்தால் இப்படி விட்டு விட்டு வலி வரும் என்பதால் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளார் எலிட்டா. ஆனால், வயிற்றுவலி நிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வேறொரு மருத்துவரை அணுகிய எலீட்டாவை மருத்துவர் வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுக்க கூறியுள்ளார்.

மருத்துவரின் ஆலோசனையின் படி எக்ஸ்ரே எடுத்துள்ளார் எலிட்டா. எலிட்டாவின் எக்ஸ்ரே பார்த்த மருத்துவர் அதிர்ச்சியானார். அதற்கு காரணம் அறுவைசிகிச்சை செய்ய பயன்பாடு கத்தி ஓன்று எலிட்டாவின் வயிற்றில் இருந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில் 23 வருடங்களுக்கு முன்பு தனக்கு சிசேரியன் நடந்ததாகவும் அப்போது இந்த தவறு நடந்திருக்கலாம் எனவும் எலிட்டா கூறினார்.

இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது வழக்கு தொடரப்பட்டு எலிட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement