உலகம்

இவங்கதான் சார் வாழும் கடவுள்!! பற்றி எரிந்த மருத்துவமனை..!! நோயாளிக்கு இருதய ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள்..

Summary:

பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்

பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பொதுவாக மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த கடவுளையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிடுகிறார்கள் மருத்துவர்கள். அப்படிபட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இது.

மாஸ்கோவில் பிளாகோவெஷ்செங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தரைத்தளத்தில் இதய நோயாளி ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. அப்போது மருத்துவமனையின் மேல்தளம் தீடீரென தீ பிடித்து ஏறிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவது தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அதேநேரம் மருத்துவமனையில் இருந்த சுமார் 100 கும் மேற்பட்ட நோய்யாளிகளையும் வெளியே மீட்டனர். இந்நிலையில்தான் 8 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று நபர் ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சை இடையே அதை நிறுத்தினாலும், வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டாலும் அது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

அதேநேரம் பற்றி எரியும் தீ இன்னும் அதிகமானால் அனைவரும் தீயில் எரிந்து இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில்தான் மருத்துவர் வாலண்டைன் ஃபிலடோவ் தலைமையிலான மருத்துவ குழு அறுவை சிகிச்சையை தொடர்வது என முடிவு செய்தது. உடனே அந்த அறைக்கு மட்டும் தனி மினசாரம் வழங்கப்பட்டு அறுவை சிகிச்சை தொடர்ந்தது.

இருப்பினும் தீயினால் ஏற்பட்ட புகை அந்த அறைமுழுவதும் பரவ தொடங்கியது, அப்போது அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த காற்று இயந்திரத்தை கொண்டு புகையை வெளியேற்றினர். இறுதியாக வெற்றிகரமாக அந்த நபருக்கு அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவர்கள் அந்த நோயாளியை வேறு இடத்திற்கு மாற்றினர்.

இந்த சம்பவமானது தற்போது உலகம் முழுவதும் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்களது கடமையை செய்ததற்காக மக்கள் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கடவுள் போல் செயல்பட்ட மருத்துவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த தீயணைப்பு வீரர்களுக்கும் விருது வழங்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement