உலகம் லைப் ஸ்டைல்

இறந்து 10 நாட்களுக்குப் பிறகு, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பெண்..! குடும்பமும், கிராமமும் பயத்தில் மூழ்கிய உண்மை சம்பவம்.!

Summary:

Dead woman gives birth to stillborn ten days after she died

கடந்த 2018 ஆண்டு , ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பவம் இது. படிக்கும்போதே சற்று ஆச்சரியத்தையும், பீதியையும் கிளப்பும் இந்த தகவல் உண்மையிலயே நடந்த ஒன்று.

தென்னாப்பிரிக்காவின் தெற்கு கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள மத்தாயிசி என்னும் பகுதியை சேர்ந்த 33 வயதான நோம்வெலிசோ நோமசொன்டோ என்ற பெண் வீட்டில் இருந்தபோது தனக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிர் இழந்தார். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் இறக்கும்போது அந்த பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தாய் இறந்த உடனே குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று உடல் இறுதி சடங்கு நடத்தும் தொழிலார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் வழக்கப்படி உடல் 10 நாட்கள் வெளியே பராமரிக்கப்பட்டு பின்னர் சவப்பெட்டியில் வைத்து புதைப்பதுதான் வழக்கம். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய எடுத்தபோது அந்த பெண்ணின் கால்களுக்கு இடையே ஒரு குழந்தையின் சடலம் இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் குழந்தையின் உடலை தாயின் உடலுடன் சேர்த்து ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துள்ளன்னர். இதுகுறித்து பேசிய ஊழியர்களில் ஒருவர், நாங்கள் 20 ஆண்டுகால இந்த தொழிலை செய்துவருவதாகவும், இதுபோன்று ஒருசம்பவம் இதற்கு முன்னர் நடந்ததே இல்லை என கூறியுள்ளார்.

மேலும், கால்களுக்கு நடுவே குழந்தை இருப்பதை பார்த்ததும் நாங்கள் அனைவரும் பயந்துவிட்டதாகவும், பிறந்த குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கூட பார்க்க எங்களுக்கு நேரமோ மனமோ இல்லை, குழந்தையை தாயுடன் சேர்த்து ஒரே சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த ஊர் முழுவதும் தீயாக பரவியதை அடுத்து நோம்வெலிசோ நோமசொன்டோவின் குடும்பத்தினர் உட்பட அந்த ஊரே பயத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியது.

பின்னர் இதுகுறித்து விளக்கம் கொடுத்த மருத்துவர் குழு, இது ஒரு ஆச்சரியமான நிகழ்வாக இருந்தாலும், மருத்துவ கூற்றுப்படி இதற்கு சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளனர். அந்த பெண் இறந்த பிறகு, பெண்ணின் வயிற்றில் ஒரு வாயு உருவாகி, அந்த வாயு காரணமாக குழந்தை அழுத்தத்திலிருந்து வெளியே வந்திருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும், மனிதன் இறந்த பிறகு, மனித உடலின் தசைகள் தளர்வாகின்றன. இதன் காரணமாக கூட குழந்தை வயிற்றில் இருந்து தானாகவே வெளியே வந்திருக்கும் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்தனர்.

ஒருவேளை அந்த பெண் உயிருக்கு போராடியபோது மருத்துவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அந்த குழந்தை பிழைத்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Source: www.deccanchronicle.com


Advertisement