சாப்பிடவந்த கஸ்டமர் கொடுத்த டிப்ஸை பார்த்து அதிர்ச்சியான பணிப்பெண்.. அந்த காசை வச்சு ஒரு ஹோட்டலே திறக்கலாம்..

சாப்பிடவந்த கஸ்டமர் கொடுத்த டிப்ஸை பார்த்து அதிர்ச்சியான பணிப்பெண்.. அந்த காசை வச்சு ஒரு ஹோட்டலே திறக்கலாம்..



Customer gives 5k USD as tips to hotel supplier

உணவகத்தில் வேலை பார்த்துவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டிப்ஸ் வழங்கப்பட சம்பவம் வைரலாகிவருகிறது.

பென்சில்வேனியாவின் பாக்ஸ்டன் எனும் டவுனில் அமைந்துள்ளது அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்ட். இந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் உணவருந்துவதற்காக வந்துள்ளார். அவருக்கு டி ஏஞ்சலோ என்ற பணிப்பெண் உணவுகளை கொண்டுவந்து பரிமாறியுள்ளார். வழக்கமாக மற்ற வாடிக்கையாளர்களை கவனிப்பதுபோலவே அந்த வாடிக்கையாளரையும் கவனித்துள்ளார் டி ஏஞ்சலோ.

இறுதியில் அந்த வாடிக்கையாளர் உணவு அருந்திவிட்டு அதற்கான தொகையுடன் சேர்த்து அந்த பணிப்பெனிற்கு டிப்சும் வழங்கியுள்ளார். வாடிக்கையாளர் வழங்கிய டிப்ஸ் தொகையை பார்த்து அந்த பணிப்பெண் பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டார். ஆம், பொதுவாக டிப்ஸ் என்றால் 10 அல்லது 20 ரூபாய் கொடுப்பது வழக்கம், ஆனால் அந்த நபர் அந்த பெண்ணிற்கு 5000 ஆயிரம் அமெரிக்க டாலர் டிப்ஸாக வழங்கியுள்ளார்.

Viral News

நம்ம ஊர் மதிப்புப்படி அந்த டிப்ஸ் தொகை சுமார் 3.67 லட்சம் ரூபாய். இதனை கண்டு பணிப்பெண் டி ஏஞ்சலோ, அந்த ரெஸ்டாரன்டின் உரிமையாளர், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் என அனைவரும் இந்த டிப்ஸ் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

பொதுவாக வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்பு இதுபோன்று சர்ப்ரைஸாக மக்களுக்கு உதவி செய்வது வழக்கமான ஒன்று. எனினும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.