உலகம்

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்.

Summary:

Crocodile found in srilanka vavuniya area at night

இலங்கையில் வவுனியா எனும் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் 5 அடி நீளமுள்ள முதலை ஓன்று புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் குடியிருக்கும் நபர் ஒருவரின் வீட்டில் உள்ள நாய் ஓன்று இரவு நேரத்தில் நீண்ட நேரமாக குறைத்துள்ளது.

நாய் நீண்ட நேரமாக குறைப்பதால் சந்திக்கமடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து பார்த்தபோது அங்கே 5 அடி நீளமுள்ள முதலை ஓன்று படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தனது பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் அவர் தெரிவிக்க அனைவரும் சேர்ந்து அந்த முதலையை விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்த முதலை அங்கிருந்த புதர் ஒன்றுக்குள் புகுந்ததை அடுத்து அடுத்த நாள் காலை இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் அந்த முதலையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.


Advertisement