
மருத்துவமனை ஒன்றுக்குள் புகுந்த மாடு ஒன்று அங்கிருந்தவர்களை முட்டி தூக்கி வீசிய காட்சி இணை
மருத்துவமனை ஒன்றுக்குள் புகுந்த மாடு ஒன்று அங்கிருந்தவர்களை முட்டி தூக்கி வீசிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
கொலம்பியாவில் சான் ரஃபேல் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிலர் மருத்துவரை சந்திப்பதற்காக காந்திருந்தநிலையில், அப்போது அந்த வழியாக வந்த பசுமாடு ஒன்று மருத்துவமனையில் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை முட்டி தூக்கி வீசியது.
இதனால் அங்கிருந்தவர்கள் பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடியதால் மிரண்ட அந்தப் பசு அடுத்தடுத்து அவர்களை முட்டியும், கால்களால் மிதித்தும் காயப்படுத்தியது. மாட்டின் திடீர் செயலை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் மாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயலும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement